தடையை மீறி திறந்திருந்த 11 கடைகளுக்கு அபராதம் :

By செய்திப்பிரிவு

தக்கலையில் அரசின் கட்டுப்பாடுகளை மீறி திறந்திருந்த துணிக் கடை உட்பட 11 கடைகளுக்கு சுகாதாரத்துறையினர் அபராதம் விதித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பத்மநாபபுரம் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் நேற்று தக்கலை பகுதியில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் முத்துராமலிங்கம் மற்றும் அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.

தக்கலை மார்க்கெட் ரோடு பகுதியில் கட்டுப்பாடுகளை மீறி திறந்து வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்த துணிக் கடை உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோல் சமூக இடைவெளியை பின்பற்றாமல் வியாபாரம் நடத்திய மேலும் 10 கடைகளுக்கு தலா ரூ.500 வீதம் அபராதம் விதித்தனர். முகக்கவசம் அணியாமல் பொருட்கள் வாங்கவருவோரை அனுமதிக்க வேண்டாம் என கடை உரிமையாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்