சோத்துப்பாறை அணையில் : முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை :

By செய்திப்பிரிவு

தேனி மாவட்டம், பெரியகுளத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் சோத்துப்பாறை அணை அமைந்துள்ளது. இதன் மொத்த உயரம் 126.28 அடி ஆகும். வராக நதி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை மூலம் அணைக்கு நீர்வரத்து உள்ளது. இந்த அணை மூலம் 2 ஆயிரத்து 865 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியும் தென்கரை, லட்சுமிபுரம், தாமரைக்குளம் பகுதிகளின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் சோத்துப் பாறை அணை நீர்மட்டம் வெகுவாக உயரத் தொடங்கியது. நேற்று காலை 124.31 அடியை எட்டியது.

விநாடிக்கு 70 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. விரைவில் முழுக் கொள்ளளவை எட்ட உள்ளதால் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக் கப்பட்டுள்ளது. முழுக் கொள்ளளவை எட்டியதும் நீர் திறக்கப்படும். இந்த நீர் பெரியகுளம், மேல்மங்கலம், ஜெயமங்கலம் மற்றும் குள்ளப்புரம் கிராமங்கள் வழியாகச் கடந்து செல்லும். எனவே அப்பகுதியில் உள்ளவர்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என்று பொதுப்பணித் துறையினர் எச்சரித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

விளையாட்டு

43 mins ago

வணிகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

38 mins ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

மேலும்