கால்நடைகளின் தாகம் தீர்க்கும் - தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப விவசாயிகள் கோரிக்கை :

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் சராசரி மழையளவு குறைந்து வருவதால் பல பகுதிகளில் நீர்நிலைகள் வறண்டு விட்டன. இதனால், மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் தண்ணீரைத் தேடி அலையும் நிலை ஏற்படுகிறது.

இதையொட்டி, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.20 ஆயிரம் மதிப்பில் பல்வேறு இடங்களில் கால்நடைகளுக்கான தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டன.

ஆனால், பல இடங்களில் தண்ணீர்த் தொட்டிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளன. தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், கால்நடைகளுக்கான தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. எனவே, கால்நடைகளின் தாகம் தீர்க்கும் வகையில், கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளை புனரமைத்து, தண்ணீர் நிரப்ப வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் கூறும்போது, "வட்டார கால்நடை மருத்துவமனை, துணை கால்நடைமருந்தகங்களில் கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில், தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல, கிராமங்கள் மற்றும் மேய்ச்சல் நிலப் பகுதிகளிலும் குடிநீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் தொட்டிகள் பயன்பாடின்றிக் காணப்படுகின்றன. எனவே, கால்நடைகளுக்கான தண்ணீர் தொட்டியில் தினமும் நீர் நிரப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்