கர்நாடக கடல் பகுதியில் மாயமாகி - மீட்கப்பட்ட குமரி மீனவர்கள் 11 பேர் தேங்காய்ப்பட்டினம் வந்தனர் :

By செய்திப்பிரிவு

விசைப்படகு சேதமடைந்ததால் கர்நாடக கடல் பகுதியில் தவித்தகுமரி மாவட்டத்தை சேர்ந்த 11 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டநிலையில் நேற்று தேங்காய்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தை வந்தடைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் வள்ளவிளையை சேர்ந்த ஜோசப் பிராங்ளின் என்பவரது விசைப்படகில் அவர் உட்பட 11 மீனவர்கள் தேங்காய்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 9-ம் தேதி மீன்பிடிக்கச் சென்றனர். கர்நாடக மாநிலம் வீரவேல் கடல்பகுதியில் கடந்த 23-ம் தேதி அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது பெரியநாயகி என்ற விசைப்படகுடன் வயர்லெஸ் தொடர்பில் இருந்துள்ளனர்.

ஆனால் மறுநாள் (24-ம் தேதி)வீரவேலில் இருந்து 400 கடல் மைல் தொலைவில் குமரி மீனவர்களின் விசைப்படகின் உடைந்த பாகங்கள்கடலில் மிதப்பதை அவ்வழியாக வந்த மீனவர்கள் பார்த்து அதிர்ச்சிஅடைந்தனர். அவர்களை தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. 11 மீனவர்களும் மாயமானது குறித்துமீன்வளத்துறை, கடலோர காவல்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து கப்பல், விமானம் மூலம் அவர்களை தேடும்பணி நடைபெற்றது.

இந்நிலையில் கடலோர காவல் படையினர் கடலில் தத்தளித்த 11 மீனவர்களையும் மீட்டு அவர்களுக்கு உணவு மற்றும் பிற உதவிகளை செய்தனர். பின்னர் பழுதான படகுடன் அவர்களை சொந்த ஊரான வள்ளவிளைக்கு அழைத்து வந்தனர். நேற்று மாலை அவர்கள் தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்தனர்.

அவர்களை வள்ளவிளை பங்குத்தந்தை ரிச்சர்டு, தெற்காசியமீனவர் தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில், குளச்சல் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அஜித் ஸ்டாலின் மற்றும் மீனவர்கள் வரவேற்றனர்.

மீட்கப்பட்ட மீனவர்கள் கூறும்போது, ‘‘கடந்த 23-ம் தேதி தங்களதுவிசைப்படகு மீது அவ்வழியாக வந்த கப்பல் மோதியதில் படகு சேதமடைந்து கடலில் தூக்கி வீசப்பட்டதாகவும், பின்னர் சேதமடைந்த படகை கண்டுபிடித்து அதில் ஏறி உயிர் தப்பியதாகவும் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

13 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தொழில்நுட்பம்

10 hours ago

சினிமா

11 hours ago

க்ரைம்

11 hours ago

மேலும்