குமரியில் பாதுகாப்பு பணியில் 1,100 போலீஸார் :

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறும் நிலையில் குமரி மாவட்டத்தில் 1,100க்கும் மேற்பட்ட போலீஸார்பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

2 கம்பெனி துணை ராணுவத்தினருடன் போலீஸார் கோணம் அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையம், பதற்றமான பகுதியாக கண்டறியப்பட்ட 20 இடங்கள் மற்றும் பொது இடங்களில் பாதுகாப்பில் ஈடுபடவுள்ளனர். இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பொது இடங்களில் தேவையின்றி கூட்டமாக சுற்றித் திரிவோர் மீது நடவடிக்கை எடுக்க எஸ்.பி. பத்ரிநாராயணன் உத்தரவிட்டுள்ளார்.

தேர்தல் வெற்றி கொண்டாட்டம் என்ற பெயரில் பொது இடங்களில் மக்களுக்கு இடையூறாக பட்டாசு வெடித்தல், கரகோஷம் எழுப்புதல் போன்றவற்றில் ஈடுபடவேண்டாம் என கட்சியினருக்கு போலீஸார் அறிவுறுத்தியள்ளனர்.

வாக்கு எண்ணும் மையம் மற்றும் அறைக்கு வெளியே, வளாகப் பகுதிகளில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். தேர்தல் அலுவலர் அறைக்கு அழைத்தால் நிலவரத்துக்கு தகுந்தாற் போல் துணை ராணுவத்தினர் நடவடிக்கையில் ஈடுபடுவர்.

இதுபோல் மாவட்டம் முழுவதும் போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்