அரியலூர் அதிமுக அலுவலகத்தில் முகவர்கள் ஆலோசனை கூட்டம் :

By செய்திப்பிரிவு

அரியலூர்: அரியலூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு செல்லும் அதிமுக முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில், அரசு தலைமைக் கொறடாவும், அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளருமான தாமரை எஸ்.ராஜேந்திரன் கலந்துகொண்டு முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

அப்போது, முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு செல்லும்போது, தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள அடையாள அட்டை, கரோனா பரிசோதனை முடிவுக்கான சான்று ஆகியவற்றை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும். அதேபோல, முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.

முதல்சுற்றாக அஞ்சல் வாக்குகள் எண்ணப்படும். பின்னர், இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். பதிவான வாக்குகளை அலுவலர்கள் காண்பிக்கும்போது, அவற்றை கவனமாக பார்த்து பதிவு செய்ய வேண்டும். சுற்று வாரியாக அறிவிக்க அறிவிக்க கூடுதல் வாக்குகள் சரியாக உள்ளனவா என சரிபார்க்க வேண்டும். அனைத்து சுற்றுகளும் முடிந்து வெற்றி அறிவிப்புக்கு பின்பே அனைத்து முகவர்களும் வெளியில் வர வேண்டும் என்றார்.

ஆலோசனைக் கூட்டத்தில், ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம், அரியலூர் நகரச் செயலாளர் செந்தில், மாவட்ட மாணவரணிச் செயலாளர் சங்கர், ஒன்றியச் செயலாளர்கள், முகவர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுலா

4 hours ago

மேலும்