கரோனா பரவலைத் தடுக்க - புதுச்சேரி எல்லைகளில் கட்டுப்பாடு : ஆளுநர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

By செய்திப்பிரிவு

புதுச்சேரியில் கரோனா பரவலைத் தடுக்க மாநில எல்லைகளில் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என துணை நிலை ஆளுநர் தலைமையில் நடைபெற்ற கரோனா மேலாண்மை குறித்த ஆலோசனை கூட்டத் தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் பரவிவரும் கரோனா நோய்த்தொற்றை தடுக்கும் வகையில் காணொலி மூலம் அனைத்து பிராந்திய அதிகாரிகள் உடன் கரோனா ஆலோசனைக் கூட்டம் ராஜ் நிவாஸில் துணை நிலை ஆளுநர் தமிழிசை தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. இதில், பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும், 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், தடுப்பூசி செலுத்துவதை மேலும் விரிவுப் படுத்த வேண்டும்,

மேலும் கரோனா பரவலைத் தடுக்க மாநில எல்லையில் உடல் வெப்ப பரிசோதனை நடத்துவது மற்றும் கட்டுப்பாடுகளை விதிப்பது, வார சந்தையை மாற்றுவது என பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து, கரோனா வார்டுகளில் பணியாற்றும் சிறந்த செவிலியர்களுக்கு இக்கூட்டத்தில் பாராட்டு தெரிவிக் கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

33 mins ago

ஜோதிடம்

38 mins ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஓடிடி களம்

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்