சென்னை புறநகர் பகுதிகளில் கரோனா பரிசோதனை தீவிரம் : ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர் ஆய்வு

By செய்திப்பிரிவு

சென்னைக்கு அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இதையடுத்து, சென்னை புறநகர் பகுதிகளான நாவலூர், படூர், சிறுசேரி, கேளம்பாக்கம், கோவளம், தாழம்பூர் மற்றும்சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை, திருப்போரூர் வட்டாரவளர்ச்சி அலுவலர் வெங்கட்ராகவன் தலைமையிலான ஊராட்சிப் பணியாளர்கள், சுகாதாரத் துறைப் பணியாளர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நேற்று நடத்தப்பட்டன. இதேபோல, சிறுசேரி தொழிற்பேட்டை பகுதியில் உள்ள நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் சிறப்பு முகாம்கள் மூலம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தடுப்பூசி பணிகள்

இதுதவிர, புறநகர்ப் பகுதியில்பல்வேறு இடங்களில் தடுப்பூசிபோடும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இப்பணிகளை செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர் செல்வகுமார் ஆய்வு செய்தார்.

அப்போது, பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள், பொது இடங்களில் தவறாது சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தினார். ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அதிகாரிகள், சுகாதாரத் துறை பணியாளர்கள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

சுற்றுலா

23 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்