அம்மன் கோயிலில் மயானக்கொள்ளை திருவிழா :

By செய்திப்பிரிவு

அரியலூர் குறிஞ்சான் குளத் தெருவில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் மயானக் கொள்ளை திருவிழா நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியையொட்டி, நேற்று முன்தினம் மாலை காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை கோயிலின் முன்பு கிடா வெட்டி அதன் ரத்தத்தை சாதத்தில் கலந்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து, கோயி லிலிருந்து பெரியநாயகி அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, ஜெயங்கொண்டம் சாலையில் உள்ள மயானத்துக்கு ஊர்வல மாக மதியம் 1 மணிக்கு கொண்டுவரப்பட்டது.

அங்கு மயானத்தில் அமைக்கப் பட்டிருந்த சுவாமி உருவத்துக்கு கீழ் கொட்டப்பட்டிருந்த அரிசி சாதத்தில் கிடா வெட்டி அதன் ரத்தத்தை கலந்தனர். பின்னர், அந்த சாதத்தை அள்ளி இரைத்தனர். அந்த ரத்த சோற்றை அங்கு திரண்டிருந்த பெண்கள் மடியேந்தி பெற்றுக்கொண்டனர். இந்த திருவிழாவில் பங்கேற்று, ரத்த சோற்றை பெற்றால், குழந்தை இல்லாத தம்பதியினருக்கு குழந்தை பேறு கிடைக்கும், திருமணத்தடை, பில்லி, சூனியம் உள்ளிட்டவை நீங்கும் என்பது நம்பிக்கை.

மேலும், திருவிழாவில் அருள் வந்து சாமி ஆடியவர்களிடம் பக்தர்கள் கோழிகளை நேர்த்தி கடனாக செலுத்தினர். இதில், அரியலூர் நகர பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

தமிழகம்

20 mins ago

சினிமா

15 mins ago

இந்தியா

16 mins ago

தமிழகம்

48 mins ago

சினிமா

57 mins ago

சுற்றுச்சூழல்

51 mins ago

தமிழகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்