தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டி - 3 பதக்கங்கள் வென்ற மதுரை மாணவி :

By செய்திப்பிரிவு

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நடைபெற்ற தேசிய ரோலர் ஸ்கே ட்டிங் போட்டியில் மதுரையைச் சேர்ந்த தலைமைக் காவலர் மகள் வெள்ளிப் பதக்கம் உட்பட 3 பதக்கங்கள் பெற்றார்.

மதுரை கடச்சனேந்தலைச் சேர்ந்தவர் அரியநாயகம். இவர் கீரைத்துறை காவல் நிலை யத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிகிறார். இவரது மகள் தேஜெஸ்வினி(14). இவர் சர்வேயர் காலனியில் உள்ள மகாத்மா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டு வீராங்கனை. ரோலர் ஸ்கேட்டிங் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. இதில் 14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் 500 மீ., 1000 மீ., 1500 மீ. ஆகிய போட்டிகளில் தேஜெஸ்வினி பங்கேற்றார். இதில் 500, 1000 மீ. போட்டிகளில் வெண்கலப் பதக்கம் பெற்றார். 1500 மீ. போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இவர் இதற்கு முன்னர் கோயம்புத்தூரில் நடந்த மாநில அளவிலான போட்டியில் மூன்று பிரிவிலும் தங்கப்பதக்கம் வென்று ள்ளார் என் பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

14 mins ago

சினிமா

18 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

32 mins ago

இந்தியா

22 mins ago

சினிமா

40 mins ago

இந்தியா

54 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்