மாமல்லபுரத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படுமா? :

By செய்திப்பிரிவு

மாமல்லபுரத்தில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பேரூராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் கலைச் சின்னங்களை கண்டு ரசிப்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து, செல்கின்றனர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே கலைச் சின்ன வளாகங்களுக்குள் அனுமதிக்கப்படுவர் என்று தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

எனினும், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தொற்று தடுப்புப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்றும், தேர்தல் பணிகளில் பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டிருந்ததால், கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட சுகாதாரப் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

தூய்மைப் பணிகள்

எனவே, சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் பகுதி என்பதால், மாமல்லபுரத்துக்கு வரும் பேருந்துகளில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும், கலைச் சின்னங்களுக்கு செல்லும் சாலைகள், கடற்கரைக் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளித்து, முழு அளவிலான தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உள்ளூர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

16 mins ago

வணிகம்

22 mins ago

இந்தியா

32 mins ago

இந்தியா

42 mins ago

இந்தியா

49 mins ago

இந்தியா

56 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சினிமா

3 hours ago

மேலும்