மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்டோர் - வாக்குப்பதிவு மையம் வர இலவச வாகனம் :

By செய்திப்பிரிவு

புதுச்சேரி மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி பூர்வா கார்க் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “புதுச்சேரியில் வாக்குப்பதிவையொட்டி கரோனா காலச்சூழ லில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட் டுள்ளது. பொதுமக்கள் வாக்குப்பதிவு மையம் வந்து வாக்களிக்க வேண்டும். 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வீட்டிலிருந்து வாக்குச்சாவடிகளுக்கு வந்து செல்ல இலவச போக்குவரத்து சேவை தேவைப்படுவோர் 1950 என்ற எண்ணில் பதிவு செய்ய கோரியிருந்தோம்.

அதன் அடிப்படையில் தேவைப்படுவோர் விவரங்கள் பூத் வாரியாக பட்டி யலிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டோர் வீட்டிலிருந்து வாக்குப்பதிவு மையம் வந்து செல்ல வாகன வசதி செய்யப்படும். மாற்றுத்திறனாளிகள், வயதானோருக்கு தேவையான வசதிகளும் வாக்குப்பதிவு மையத்தில் இருக்கும்” என்று குறிப் பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்