போக்குவரத்து அல்லாத வாகனங்கள் சாலை வரி செலுத்த சிறப்பு முகாம் :

By செய்திப்பிரிவு

போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கான ஆண்டு சாலைவரி வசூலிக்க தருமபுரி மாவட் டத்தில் சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:

போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கான ஆண்டு சாலை வரி (2020-21 நிதியாண்டுக்கு) வசூலிக்க தருமபுரி மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் அரூர், பாலக்கோடு பகுதி அலுவலகங்கள் ஆகியவற்றில் வரும் 10-ம் தேதி வரை இந்த முகாம் நடக்க உள்ளது. வேலை நாட்களில் காலை 10 முதல் பகல் 1.30 மணி வரை முகாம் செயல்படும். எனவே, ஆண்டு வரி செலுத்தக்கூடிய இருசக்கர வாகனங்கள்,கார், ஜீப், டிராக்டர் மற்றும் டிரெய்லர், கம்பரசர், கிரேன் மற்றும் பொக்லைன் உள்ளிட்ட வாகன உரிமையாளர்கள் இந்த முகாமை பயன்படுத்தி அரசுக்கு செலுத்த வேண்டிய சாலை வரியை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வழங்கப்பட்ட காலக்கெடுவுக் குள் செலுத்தினால் அபராதம் தவிர்க்க முடியும். சாலை வரி செலுத்த வரும்போது வாகன அசல் பதிவுச் சான்று, காப்புச் சான்று மற்றும் புகைச் சான்று ஆகியவற்றை உடன் எடுத்து வர வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்