ரங்கத்தை புனித நகரமாக அறிவிக்க நடவடிக்கை : அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் வாக்குறுதி

By செய்திப்பிரிவு

திருச்சி ரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் நேற்று அந்தநல்லூர், மணிகண்டம், மணப்பாறை, இனாம்குளத்தூர் சமுத்திரம் உள்ளிட்ட இடங்களில் இறுதிக்கட்ட பிரச்சாரம் மேற்கொண்டார். ரங்கம் ராஜகோபுரம் பகுதியில் அவர் பேசியது:

ரங்கத்தை மத்திய, மாநில அரசுகள் புனித நகரமாக அறிவிக்க பாடுபடுவேன். ரங்கத்துக்கு கொள்ளிடம் நீரைக் கொண்டு வர தனித் திட்டம் நிறைவேற்றப்படும். கொள்ளிடத்தில் கலக்கும் கழிவுநீரைச் சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதியில் சாலை, குடிநீர் வசதிகள் மேம்படுத்தப்படும். வண்ணத்துப் பூச்சி பூங்கா விரிவுபடுத்தப்படும்.

அந்தநல்லூர் ஒன்றியத்தில் வாழை, நெற்பயிர்களை மதிப்புக்கூட்டுப் பொருட்களாக மாற்ற வழிவகுக்கப்படும். மணிகண்டம் ஒன்றிய பகுதியை திருச்சி மாநகரின் துணை நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

ரங்கம் பகுதியில் மகளிர் கலை- அறிவியல் கல்லூரி அமைத்துத் தரப்படும். திருச்சி நீதிமன்ற பகுதி முதல் அல்லித்துறை வரை உய்யக்கொண்டான் வாய்க்காலை தூர் வாரி, கரையில் ஒருவழிச் சாலை அமைக்கப்படும். மல்லிகை பூ உற்பத்தியைப் பெருக்க வெப்பமூட்டி குடில், சென்ட் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கப்படும். இனாம்குளத்தூர் குளம் தூர்வாரப்படும்.

கம்பரசம்பேட்டை, பேட்டைவாய்த்தலை பள்ளிவாசல்களைச் சேர்ந்தவர்களுக்கு தனி அடக்கஸ் தலம் ஒதுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த வாக்குறுதிகள் மட்டுமன்றி தொகுதி மக்களுக்கான அனைத்துத் தேவைகளையும் நிச்சயம் செய்வேன் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

25 mins ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

6 hours ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்