கரோனா பரவல் அபாயம் காரணமாக நிகழாண்டு - செட்டிக்குளம் கோயில்களில் பங்குனி உத்திர தேரோட்டம் ரத்து :

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டம் செட்டிக் குளம் ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தண்டாயுதபாணி கோயில்களில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த தேரோட்டம் கரோனா பரவல் அபாயம் காரணமாக நடைபெறாது என ஆட்சியர் ப.வெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் தெரிவித் துள்ளது:

பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தண்டாயுதபாணி சுவாமி கோயில்களில் பங்குனி உத்திர தேர் திருவிழா மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கரோனா தொற்று பரவல் தற்போது அதி கரித்து வருகிறது. எனவே, கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பாதுகாப்பு மற்றும் வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்றி திருவிழா நடத்தப் பட உள்ளது.

நிகழாண்டு மார்ச் 20 அன்று நடைபெறவிருந்த பங்குனி உத்திர பெருந்திருவிழா கொடியேற்றம், சுவாமி வீதியுலா மற்றும் மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த தேரோட்டம் ஆகிய நிகழ்வுகள் நடைபெறாது.

அதேசமயம் பங்குனி உத்திர திருவிழாவுக்கான அனைத்து நடைமுறைகளும் ஆகம விதிகளை மீறாமல் நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி கோயி லின் உள் வளாகத்திலேயே (மலைக்கோயிலில்) நடைபெறும்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றியும், அரசு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

13 mins ago

வாழ்வியல்

18 mins ago

ஜோதிடம்

44 mins ago

க்ரைம்

34 mins ago

இந்தியா

48 mins ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்