திருமண நிகழ்ச்சிகளில் கட்சி கொடி கட்ட தடை :

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை : தி.மலை மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சிகளில் அரசியல் கட்சியினரை வரவேற்க கட்சி கொடிகளை கட்டக்கூடாது என தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளதால் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்ற பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்ல கட்டுப்பாடு, சுவர் விளம்பரம் செய்ய தடை உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில், திருமண நிகழ்ச்சிகளும் இடம் பெற்றுள்ளன. அரசியல் கட்சி பிரமுகர்களின் இல்லத் திருமணங்களுக்கு முக்கிய நிர்வாகிகளை அழைக்கும்போது, அவர்களை வரவேற்கும் விதமாக, சாலைகளில் கட்சிக் கொடிகள் கட்டப்படும்.

மேலும், தலைவர்களின் புகைப்படத்தை அச்சிட்டு பேனர்கள் கட்டப்படும். இதற்கு, தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. திருவண்ணாமலை மாவட் டத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் கட்சி கொடிகள் கட்டப்பட்டும் மற்றும் அரசியல் சார்ந்த விளம்பர பேனர்கள் வைத்திருந்தால், அதனை அகற்ற வேண்டும் என உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உத்தரவிட்டுள் ளனர். மேலும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்