நூல் ஏற்றுமதி செய்வதற்குதடை விதிக்க வலியுறுத்தல் :

By செய்திப்பிரிவு

திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் ராயபுரத்தில் நடந்தது.சங்கத் தலைவர் எம்.கே.எம். பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார்.

கரோனா பாதிப்பில் இருந்துதற்போது தான் நிறுவனங்கள் மீண்டு வருகின்றன. இந்நிலையில் நூல் விலை உயர்வு கடும் சிரமத்தைஏற்படுத்துகிறது. பின்னலாடைத் தொழிலும் பாதிக்கப்படுகிறது.

எனவே நூற்பாலைகள் நூல்விலையை குறைக்க வேண்டும். அடுத்த மாதமும் நூல் விலை குறையவில்லை என்றால், இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள உற்பத்தி நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும். மூலப்பொருட்கள் விலை உயர்வு, ஜாப் ஒர்க் கட்டணங்கள் உயர்வால்தொழில் துறையினர் கடும் சிரமத்தைசந்தித்து வருகின்றனர். நூல் விலைஉயர்வால், ஆடைகளின் விலையும் உயர்வதால், பொது மக்கள் பாதிக்கப்படுவர். நூல் ஏற்றுமதிக்குதடை விதிக்க வேண்டும். உள்நாட்டுஉற்பத்தியாளர்களின் தேவைக்குஏற்ப நூல் விநியோகம் செய்யவேண்டும். நூல் விலை உயர்வு பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் விரைவில் தீர்வு காண வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

5 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்