வாக்குச் சாவடிளில் ஆய்வு நடத்த மண்டல அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று உடுமலை சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட மண்டல அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கோட்டாட்சியர் சி.கீதா தலைமை வகித்தார். வட்டாட்சியர் ராமலிங்கம், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் விவேகானந்தன் ஆகியோர் பங்கேற்றனர். இதுகுறித்து வருவாய்த் துறையினர் கூறும்போது, ‘‘உடுமலை சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்டு மொத்தம் 380 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 10 அல்லது 9 வாக்குச் சாவடிகளுக்கு ஒரு மண்டல அலுவலர், ஒரு உதவி மண்டல அலுவலர், ஒரு உதவியாளர் நியமிக்கப்படுவர். அதன் அடிப்படையில் உடுமலை தொகுதிக்கு தலா 37 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், யாருக்கு எந்த மண்டலம் ஒதுக்கப்பட்டுள்ளது? என்ற விவரம் தெரிவிக்கப்பட்டது. அந்தந்த மண்டலத்துக்குரிய அலுவலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச் சாவடியை நேரில் ஆய்வு செய்ய வேண்டும். அங்கு அடிப்படை வசதிகள் உள்ளதா? என்ற விவரத்தை ஒரு வாரத்துக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

4 mins ago

உலகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஆன்மிகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்