கோவில்பட்டியில் ஹாக்கி போட்டி

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தூத்துக்குடி மாவட்ட பிரிவு சார்பில் மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டிகள் பிப்ரவரி 27, 28-ம்தேதிகளில் கோவில்பட்டி செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் நடக்கிறது. இந்த ஹாக்கிலீக் போட்டிகளில் கலந்துகொள்ள வயது வரம்பு, நுழைவுகட்டணம் கிடையாது. போட்டிகள் ஆண்களுக்கு மட்டும் நடத்தப்படுகிறது.

இதில், கலந்து கொள்ள விருப்பமுள்ள ஹாக்கி அணிகள் தங்கள் அணியில் விளையாடும் வீரர்களின் பெயர்பட்டியல், முகவரி மற்றும் செல்போன் எண் போன்றவற்றை நாளை (26-ம் தேதி) மதியம் 2 மணிக்குள் 9994641614 என்றசெல்போன் எண்ணில் தெரிவிக்க வேண்டும்.

போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படும். இத்தகவலை தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் டி.வி.பேட்ரிக் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

சினிமா

52 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

உலகம்

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்