வேலூரில் வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் ரவுடிகள் மாவட்ட ஆட்சியரிடம் வணிகர் சங்கத்தினர் முறையீடு

By செய்திப்பிரிவு

வேலூரில் வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம், வணிகர் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். அதில், ‘‘வேலூர் மார்க்கெட், ஆரணி ரோடு, சுண்ணாம்புக்கார தெரு, அண்ணா பஜார் பகுதிகளில் ரவுடிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. வியாபாரிகளை கத்தியால் வெட்டியும், மிரட்டியும் பணம் வசூலிக்கின்றனர். இதனை தடுக்க வேண்டும்.

மேலும், கிருபானந்த வாரியார் சாலையோர கடைகள் ஆக்கிரமிப் பால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தடுக்க சாலையில் தடுப்பு சுவர் ஓரம் அளவீடு செய்து அவர்களுக்கு கடைகளை ஒதுக்கித்தர வேண்டும்‌.

அதேபோல், வேலூர் மாநக ராட்சிக்கு உட்பட்ட காட்பாடி பகுதியில் செயல்படும் உணவு பாதுகாப்பு அதிகாரி, அரசின் விதிகளை மீறி தன்னிச்சையாக உதவியாளர் ஒருவரை நியமித்துள்ளார். இவர்கள், இருவரும் உணவு பாதுகாப்பு சட்டத்துக்கு எதிராக செயல்படுவதுடன் வியாபாரிகளை மிரட்டி லஞ்சம் கேட்கின்றனர். காட்பாடி பகுதியில் முறையாக அனுமதி கேட்டுவிண்ணப்பிப்பவர்கள், புதுப்பிப்ப வர்களுக்கு உரிய நேரத்தில் அனுமதியை வழங்கு வதில்லை. அரசு நிர்ணயித்த கட்டணம் செலுத்தி காத்திருக்கும் வியாபாரிகளுக்கு லஞ்சப் பணம் வரவில்லை எனக்கூறி அனுமதி தர மறுக்கின்றனர்.

எனவே, இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

53 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்