மழை பாதிப்புக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் சாலை மறியல்

By செய்திப்பிரிவு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தை அடுத்த பழையபாளையம் கிராமத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, நிவாரணம் வழங்காத அதிகாரிகளை கண்டித்தும், உடனடியாக நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் புத்தூரிலிருந்து புதுப்பட்டினம் செல்லும் நெடுஞ்சாலையில், பழையபாளையத்தில் காவிரி பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்டச் செயலாளர் விசுவநாதன் தலைமையில் விவசாயிகள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த சீர்காழி வட்டாட்சியர் ஹரிதரன், கொள்ளிடம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் சுப்பையன், வட்டார வேளாண் அலுவலர் விவேக், புதுப்பட்டினம் இன்ஸ்பெக்டர் சந்திரா ஆகியோர் அங்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், பிப்.27-ம் தேதிக்குள் அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்