கல்லூரியில் பயிலும் 18,189 மாணவர்களுக்கு விலையில்லா 2 ஜிபி டேட்டா கார்டு

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், கல்லூரிகளில் பயிலும் 30 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லாமல் 4 மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி பயன்படுத்தும் வகையில் டேட்டா கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார். எம்எல்ஏ.க்கள் பர்கூர் ராஜேந்திரன், ஊத்தங்கரை மனோரஞ்சிதம் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநிலங்களவை உறுப்பினர் கே.பி.முனுசாமி பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா டேட்டா கார்டுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதற்கட்டமாக பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி, 3 சுயநிதி பொறியியல் கல்லூரி, 3 அரசு பாலிடெக்னிக் கல்லூரி, 7 சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரி, 4 அரசு கலைக்கல்லூரி, 9 சுயநிதி கலைக்கல்லூரி என மொத்தம் 27 கல்லூரிகளில் பயிலும் 18,189 மாணவ, மாணவிகளுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா பயன்படுத்தும் வகையில் டேட்டா கார்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, மாணவ, மாணவிகள் இந்த டேட்டா கார்டுகளை பெற்று சிறப்பான முறையில் கல்வி பயின்று தங்களுக்கு விருப்பமான துறையில் சிறந்து விளங்க வேண்டும், என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

ஓடிடி களம்

33 mins ago

கல்வி

47 mins ago

சினிமா

55 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

59 mins ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

மேலும்