கள்ளச்சாராய விற்பனையை தடுக்க கோரிக்கை

By செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: நாகை வட்டம் வடக்கு பொய்கை நல்லூரைச் சேர்ந்த சாமிநாதன் தலைமையில், அந்தக் கிராம மக்கள், நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், ஆட்சியர் பிரவீன் பி.நாயரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

எங்கள் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் சிலர் புதுச்சேரி சாராயத்தை வாங்கி வந்து, வீட்டில் பதுக்கிவைத்து, எங்கள் கிராமத்திலுள்ள சித்தர் கோயில், சிவன் கோயில், குடிநீர் பிடிக்கும் இடம், சமுதாயக் கூடம் ஆகிய பகுதிகளில் காலை முதல் இரவு வரை விற்பனை செய்து வருகின்றனர். இதனால், அந்தப் பகுதி வழியாக செல்லும் பெண்களை, சாராயம் குடித்துவிட்டு போதையில் நிற்பவர்கள் கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். இதுகுறித்து ஊர் பொதுமக்கள் தட்டிக்கேட்டால், அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுதொடர்பாக, காவல் துறையிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, எங்கள் பகுதியில் கள்ளச்சாராய விற்பனையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

20 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்