கடலூர் மாவட்டத்தில் 12 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை தொடர்ந்து 12 மணி நேரம் கனமழை கொட்டித்தீர்த்தது.

கடலூர் மாவட்டத்திலேயே கடலூரில் தான் அதிகமாக மழைபெய்துள்ளது. அண்ணா விளை யாட்டரங்கம், பேருந்து நிலையம், ரயில்வே சுரங் கப்பாதை உள் ளிட்ட பல்வேறு இடங்களில் குளம்போல மழை தண்ணீர் தேங்கி நின்றது. குடியிருப்பு பகுதிகளிலும் மழை தண்ணீர் குளம் போலதேங்கியது.

இதனால் பொதுமக் கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாரான நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவ சாயிகள் விற்பனைக்காக எடுத்து வந்த சுமார் 50 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து பாதிப்படைந்துள்ளது.

நேற்றைய மழையளவு: கடலூரில்- 185.60 மி.மீ, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்- 163 மி.மீ,வானமாதேவி- 135 மிமீ, குறிஞ்சிப்பாடி-100 மி.மீ, பரங்கிப்பேட்டை -70.60 மி.மீ, புவனகிரி- 70 மி.மீ,லால்பேட்டை 35 மி.மீ, முஷ்ணம்- 34.30 மி.மீ, காட்டுமன்னார் கோவில்- 32 மி.மீ, பண்ருட்டி- 28 மி.மீ, சேத்தியாத்தோப்பு- 22.60 மி.மீ, சிதம்பரம்-15.80 மி.மீ மழை பெய்துள்ளது.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை கனமழை பெய்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் கடந்த ஜனவரி மாதம் வரை பருவ மழை நீடித்தது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் ஏரி, குளங்கள் 80 சதவீதம் நிரம்பின. பல ஆண்டுகளுக்கு பிறகு தென்பெண்ணை, மலட்டாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை இடைவிடாமல் கனமழை பெய்தது.

மரக்காணத்தில் அதிக அளவு மழை பெய்துள்ளது. விழுப்புரம் நகரில் தாழ்வான இடங்களில் குறிப்பாக கீழ்பெரும் பாக்கம் தரைப்பாலம், விஜிபி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. பொதுமக்கள் காலை முதல் வீட்டில் இருந்து வெளியே வர முடியவில்லை. விழுப்புரம் நகரில் காலை 10 மணிக்கு மேல் மழை குறைந்து வெயில் அடிக்க தொடங்கியது.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்றுகாலை வரை பெய்த மழை அளவு:விழுப்புரம்- 4 மி.மீ, கோலிய னூர்- 2 மி.மீ, வானூர்- 46 மி.மீ, மரக்காணம்-54 மி.மீ மழை பதிவாகி உள்ளது என விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தொழில்நுட்பம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

மேலும்