ஜெ. நினைவிட திறப்பு விழாவுக்கு வந்தபோது உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவுக்கு வந்தபோது உயிரிழந்த 2 பேர் குடும்பங்களுக்கு குடும்ப நல நிதியாக தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்று அதிமுக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட இரங்கல் செய்தி:

சென்னை, மெரினா கடற்கரையில் 27-ம் தேதி நடைபெற்ற ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் பங்கேற்க வந்த திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், நத்தம் வடக்கு ஒன்றியம், சிறுகுடி ஊராட்சி இந்திராநகர் கிளைக்கழகத்தைச் சேர்ந்த கே.மூக்கன் மாரடைப்பால் காலமானார். அதேபோல், திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், மணப்பாறை ஒன்றியம், வேங்கைகுறிச்சி ஊராட்சி, மாராச்சிரெட்டிபட்டி கிளைக்கழக அவைத் தலைவர் ஏ.மாரியப்பன், நிகழ்ச்சி முடிந்து ஊர் திரும்பும் போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தோம்.

இருவரின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மறைந்த மூக்கன், மாரியப்பன் ஆகியோர் குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் குடும்பநல நிதியுதவியாக தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

15 mins ago

சினிமா

44 mins ago

க்ரைம்

25 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

38 mins ago

தொழில்நுட்பம்

20 mins ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்