ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்யும் நடைமுறை தொடக்கம்

By செய்திப்பிரிவு

ஜேஇஇ முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பங்களில் திருத்தம் செய்யும் நடைமுறை நேற்று தொடங்கியது.

நாடு முழுவதுமுள்ள ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும்.

இவை ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு, ஜேஇஇ பிரதான தேர்வு என 2 கட்டங்களாக நடத்தப்படும். இதில் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் முதல்நிலை தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

ஜேஇஇ தேர்வு இனி ஆண்டுக்கு 4 முறை தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்தப்படும். அதன்படி முதல்கட்ட ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு பிப்ரவரி 23 முதல் 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த டிசம்பர் 16-ல் தொடங்கி ஜனவரி 23-ம் தேதியுடன் நிறைவுபெற்றது.

இந்நிலையில் விண்ணப்பங்களில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதை திருத்தம் செய்வதற்கான வசதிகளை என்டிஏ மேற்கொண்டுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையவழியில் ஜனவரி 30-ம் தேதிக்குள் தங்கள் விண்ணப்பங்களில் திருத்தம் செய்து கொள்ளலாம்.

அதைத் தொடர்ந்து ஜேஇஇ முதல்நிலைத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் பிப்ரவரி 2-வது வாரத்தில் வெளியிடப்படும். கட்டண விவரங்கள் உட்பட கூடுதல் தகவல்களை http://www.nta.ac.in/ என்றதளத்தில் அறியலாம் என்றுஎன்டிஏ தெரிவித்துள்ளது.

ஜேஇஇ முதல்நிலைத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் பிப்ரவரி 2-வது வாரத்தில் வெளியிடப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

விளையாட்டு

9 mins ago

தமிழகம்

21 mins ago

சுற்றுலா

41 mins ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்