மாணவர்களுக்கு அறிவியல் ஆய்வறிக்கை போட்டி

By செய்திப்பிரிவு

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் அங்கமான தேசிய குழந்தைகள் அறிவியல் காங்கிரஸ் அமைப்பு சார்பில், மாணவர்களின் அறிவியல் ஆய்வுத் திறமைகளை வளர்க்கும் வகையில் ஆண்டுதோறும் அறிவியல் ஆய்வுக் கட்டுரை தயாரிக்கும் போட்டி நடத்தப்படுகிறது.

தமிழக அளவில் இப்போட்டிகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தி வருகிறது. கரோனா தொற்று காரணமாக இணையவழியில் போட்டிகள்நடைபெற்று வருகின்றன. நீலகிரி மாவட்ட அளவிலான போட்டிகளை அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் கே.ஜே.ராஜுதொடங்கிவைத்தார். செயலர்சங்கர் வரவேற்றார்.சீனியர் பிரிவில் கூடலூர் ஐடியல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முகமது இஸ்மான், அஸ்வந்த் தயாரித்த `இணையதளங்களின் தாக்கம்' என்ற கட்டுரையும், கட்டபெட்டு பாக்கியாநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகள் அபிநயா, மோனிகா தயாரித்த சிறுதானியங்கள் குறித்த ஆய்வுக்கட்டுரையும் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளன. பேராசிரியர் சதீஷ்குமார், ஆசிரியர்கள் பரமேஸ்வரன், பாக்கியலட்சுமி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

இந்தியா

1 min ago

சினிமா

6 mins ago

தமிழகம்

8 mins ago

இந்தியா

22 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

26 mins ago

இந்தியா

47 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

40 mins ago

விளையாட்டு

1 hour ago

மேலும்