தி.மலை அடுத்த வேங்கிக்காலில் தமிழ்நாடு விஏஓ-க்கள் சங்கமாவட்ட பொதுக்குழு கூட்டம்

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் தி.மலை அடுத்த வேங்கிக்காலில் நேற்று நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏழுமலை முன்னிலை வகித்தார். வட்டச் செயலாளர் காளிமுத்து வரவேற்றார். மாநிலச் செயலாளர் சுரேஷ் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், மறைந்த முன்னாள் மாநில தலைவர் மீனாட்சி சுந்தரத்துக்கு மவுன அஞ்சலி செலுத்தி இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், “புதிய கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நிலஅளவை மற்றும் நிர்வாக பயிற்சியை அளிக்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கோட்ட அளவிலான குறைதீர்வு கூட்டம் நடத்த வேண்டும், வாக்குச்சாவடி செலவுக்கான முன்பணத்தை தேர்தலுக்கு முன்பாக வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு புதிய மடிக்கணினி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

இதில், மாவட்ட துணைத் தலைவர் கணேஷ், மாவட்ட அமைப்பு செயலாளர் மகாலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர். இறுதியில், மாவட்டப் பொருளாளர் ஜெயசந்திரன் நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

மேலும்