விருதுநகர் மாவட்டத்துக்கு அதிமுக ஆட்சியில்தான் அதிக குடிநீர் திட்டங்கள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தகவல்

By செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்டத்துக்கு அதிமுக ஆட்சியில்தான் ஏராள மான கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.

அருப்புக்கோட்டையில் எம்ஜிஆரின் 104-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நகரச் செயலாளர் சக்திபாண்டியன் தலைமையில் நடந்தது. ஒன்றியச் செயலாளர்கள் வாசு தேவன் (தெற்கு), சங்கரலிங்கம் (வடக்கு), கிழக்கு மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் ராமநாதன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசிய தாவது: திமுக ஆட்சிக் காலத்தில் ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது தமிழகம் முழுவதிலும் 18 மணி நேரம் மின்தடை இருந்ததை மக்கள் அறிவார்கள். விருதுநகர் மாவட்டத்துக்கு அதிமுக ஆட்சியில்தான் ஏராளமான கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

தாமிரபரணி, கொண்டால்நகரம், சீவலப்பேரி, வல்லநாடு, முக்கூடல் போன்ற ஏராளமான கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம், என்றார்.

கூட்டத்தில், இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாநிலச் செயலாளர் பரமசிவம் எம்எல்ஏ,, கிழக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், தலைமைக் கழகப் பேச்சாளர்கள் சின்னையா, குமரி பிரபாகரன், எமி ஆகியோர் பேசினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

40 mins ago

விளையாட்டு

58 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

இணைப்பிதழ்கள்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்