தி சென்னை சில்க்ஸ் குரூப் சார்பில் சேலம் ஆட்சியர் அலுவலகத்துக்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி வாகனம்

By செய்திப்பிரிவு

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த வசதியாக தி சென்னை சில்க்ஸ் குரூப் ஆஃப் கம்பெனி சார்பில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

சேலம் ஆட்சியர் அலுவல கத்தில் வாரம்தோறும் திங்கள் கிழமை ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வருவோருக்கு ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பல்வேறு துறை அலுவலகங்களுக்கு செல்ல வசதியாக தி சென்னை சில்க்ஸ் குரூப் ஆஃப் கம்பெனி மூலம் ரூ.5 லட்சம் மதிப்பில் ஆறு பேர் அமர்ந்து செல்லும் பேட்டரி வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

வாகனத்தை தி சென்னை சில்க்ஸ் குரூப் ஆஃப் கம்பெனி நிறுவன மேலாண்மை இயக்குநர் கண்ணபிரான், ஆட்சியர் ராமனிடம் வழங்கினார். இதையடுத்து, ஆட்சியர் ராமன், வாகனத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொடி அசைத்து தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

இந்தியா

46 mins ago

தமிழகம்

32 mins ago

சினிமா

57 mins ago

இணைப்பிதழ்கள்

58 mins ago

வணிகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

மாவட்டங்கள்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்