காரிமங்கலம் ஒன்றியத்தில் ரூ.39.20 லட்சத்தில் கால்வாய் சீரமைப்பு பணி தொடக்கம்

By செய்திப்பிரிவு

காரிமங்கலம் ஒன்றியத்தில் ரூ.39.20 லட்சம் மதிப்பிலான கால்வாய் சீரமைப்புப் பணியை உயர் கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியத்தில் நெடுஞ்சாலைத்துறை மூலம் மாட்லாம்பட்டியில் ரூ.39.20 லட்சம் மதிப்பில் மாநில சாலைகள் வடிகால் கால்வாய் மறுசீரமைக்கும் பணி நடக்க உள்ளது. இந்த பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர் கார்த்திகா தலைமை வகித்தார். தமிழக உயர் கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பூமி பூஜையுடன் பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் பேசியது:

தருமபுரி நெடுஞ்சாலை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கோட்டம் மூலம் ரூ.167.59 கோடி செலவில் 377.16 கிலோ மீட்டர் நீள சாலைகள் மேம்பாட்டுப் பணிகளும், ரூ.9.66 கோடி மதிப்பீட்டில் 16 சிறு பாலங்கள் கட்டும் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது. 2020-21-ம் ஆண்டு ரூ.28.46 கோடி மதிப்பில் 13.80 கிலோ மீட்டர் நீள சாலைகளை அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணிகள் மற்றும் ரூ.7.14 கோடி மதிப்பில் 6 சிறு பாலங்கள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.

இவ்வாறு பேசினார்.

இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஆர்த்தி, தருமபுரி கோட்டாட்சியர்(பொ) தணிகாசலம், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் தனசேகர், உதவி செயற் பொறியாளர் ராஜகாந்தன், வட்டாட்சியர் கலைச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிவண்ணன், மீனா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 mins ago

வலைஞர் பக்கம்

47 mins ago

கல்வி

40 mins ago

இந்தியா

37 mins ago

தமிழகம்

43 mins ago

ஓடிடி களம்

50 mins ago

இணைப்பிதழ்கள்

12 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்