பொங்கல் வைத்து மாணவியர் உற்சாகம்

By செய்திப்பிரிவு

நாகர்கோவில்/கோவில்பட்டி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பொங்கலை முன்னிட்டு கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டத்தில் உள்ள கல்லூரிகளில் பொங்கல் வைத்து மாணவ, மாணவியர் பொங்கல் விழாவை கொண்டாடினர். கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மாணவியர், கல்லூரி வளாகத்தில் சமத்துவ பொங்காலையிட்டு உற்சாகத்தை வெளிப்படுத்தினர். தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவூட்டும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கோவில்பட்டி

கோவில்பட்டியில் உள்ள அரசு கல்லூரி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் மணிகண்டன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி, துணைத்தலைவர் பழனிசாமி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சந்திரசேகர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஜோசப் சுரேஷ் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நாகலாபுரம் மனோன்மணியம் சுந்தரனார் மாதிரி கல்லூரியில் முதல்வர் சாந்தகுமாரி தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. பேராசிரியர்கள் மட்டும் கலந்து கொண்டனர். மந்தித்தோப்பு கிராமத்தில் சமக சார்பில் நடந்த பொங்கல் விழாவில் ஒன்றிய செயலாளர் ஆணிமுத்துராஜ் தலைமையில் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.பாஸ்கரன் பொதுமக்களுக்கு காய்கறிகள், கரும்பு, இனிப்பு ஆகியவற்றை வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்