குன்னூர் அருகே விதிமீறி மலையை குடைந்து சாலை

By செய்திப்பிரிவு

குன்னூர் காட்டேரி அணை அருகே விதிமீறி மலையை குடைந்து சாலை அமைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த இயற்கை ஆர்வலர் சு.மனோகரன் கூறும் போது, ‘‘தடையை மீறி குன்னூர் அருகே உள்ள அதிகரட்டி பேரூராட்சிக்குட்பட்ட காட்டேரி அணைகிராமம் அருகே தேயிலைத் தோட்டங்களை அழித்து, பொக்லைன் இயந்திரம் மூலமாக மலையைக் குடைந்து சாலை அமைத்து வருகின்றனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ரா.மனோரஞ்சிதம் கூறும்போது, “சாலை அமைக்கப்பட்ட இடம்அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி.

அவர்கள் அனுமதியில்லாமல் சாலை அமைத்ததால், பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. சாலை அமைக்க வருவாய்த் துறைஅதிகாரிகள்தான் அனுமதி வழங்க வேண்டும். தூரட்டி கிராமத்தை சேர்ந்தவருக்கு சொந்தமான இடம் கோவையை சேர்ந்தவருக்கு விற்கப்பட்டுள்ளது, அவர்கள் சாலையை அமைத்துள்ளனர். விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் குப்பட்டா என்ற சிறிய ரக பொக்லைன் இயந்திரம் மூலமாக சாலை அமைத்துள்ளனர். இந்த இயந்திரத்துக்கு தோட்டக்கலைத் துறை அனுமதி வழங்கி வந்த நிலையில், இந்த இயந்திரத்தை பயன்படுத்தி கட்டுமானப் பணிகள்நடப்பதால், தற்போது இயந்திரப்பயன்பாட்டுக்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உரிமையாளர்களிடம் விசாரணை மேற்கொள்ள அதிகரட்டி பேரூராட்சி செயல் அலுவலருக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

21 mins ago

இந்தியா

36 mins ago

ஆன்மிகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

மேலும்