டாஸ்மாக்கில் விடுமுறை நாட்களில் மது விற்பனையை தடுக்க கோரிக்கை

By செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: சிவசேனா கட்சி, இந்து மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாகையில் நேற்று நடைபெற்றது. சிவசேனா மாநிலச் செயலாளர் சுந்தரவடிவேலன் தலைமை வகித்தார். இந்து மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், நாகை நகரத் தலைவர் பிரதீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவசேனா இளைஞரணி மாநிலச் செயலாளர் சிங்காரவடிவேலன், மண்டலத் தலைவர் வின்சென்ட், மாவட்டத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், இந்து மதக் கடவுள்கள், வழிபாடு, கலாச்சாரம், பண்பாடு ஆகியவை குறித்து, இந்துக்களின் மனம் புண்படும்படி பேசும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனைக் கண்டிப்பது, டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விடுமுறை நாட்களிலும் மது விற்பனை நடைபெறுவதை தடுத்து நிறுத்த காவல்துறையை கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

இந்தியா

14 mins ago

தமிழகம்

47 mins ago

சுற்றுச்சூழல்

38 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்