நிதிநிறுவன மோசடி: 2 பேர் கைது

By செய்திப்பிரிவு

நாகர்கோவில்: நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதன் கிளையானது கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் இயங்கி வந்தன. பலர் இந்த நிதி நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்திருந்தனர்.

இந்நிலையில், நாகர்கோவில் கோட்டாறைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வசந்தகுமார்(40) என்பவர் நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவில் அளித்த புகாரில், “நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை திருப்பி கேட்டபோது நிறுவனத்தினர் வழங்கவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி முத்துபாண்டியன் மற்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து நிதி நிறுவனத்தை நடத்திய திருவிதாங்கோட்டைச் சேர்ந்த செய்யதுஅலி, அழகியமண்டபத்தைச் சேர்ந்த ஜெயசசிதரன், பிலாவிளையைச் சேர்ந்த எட்வின் சுதாகர், மார்த்தாண்டத்தைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதில் ஜெயசசிதரன், எட்வின் சுதாகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

இந்தியா

42 mins ago

தமிழகம்

28 mins ago

சினிமா

53 mins ago

இணைப்பிதழ்கள்

54 mins ago

வணிகம்

39 mins ago

தமிழகம்

59 mins ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

மாவட்டங்கள்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்