தீவிரவாதிகள் தாக்குதலில் இறந்த எஸ்ஐ வில்சன் முதலாம் ஆண்டு நினைவு தினம் மார்த்தாண்டத்தில் எஸ்பி மரியாதை

By செய்திப்பிரிவு

களியக்காவிளை சோதனைச் சாவடியில் தீவிரவாதிகள் தாக்கியதில் உயிரிழந்த எஸ்ஐ வில்சன் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு போலீஸார் வீரவணக்கம் செலுத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த ஆண்டு ஜனவரி 8-ம் தேதி இரவு பணியில் இருந்த சிறப்பு எஸ்ஐ வில்சன் தீவிரவாதிகளால் சுட்டு கொலை செய்யப்பட்டார். அவரது முதலாமாண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.

மார்த்தாண்டத்தில் உள்ள எஸ்ஐ வில்சனின் வீட்டுக்கு சென்ற கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன், அங்குவில்சனின் உருவப் படத்துக்குமரியாதை செலுத்தினார். பின்னர் வில்சனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தக்கலை டிஎஸ்பி ராமச்சந்திரன் மற்றும் ஏராளமான போலீஸாரும் எஸ்ஐ வில்சன் படத்துக்கு மரியாதை செலுத்தினர். புதுக்கடை மற்றும் மாவட்டத்தில் உள்ள பிற காவல் நிலையங்களில் எஸ்ஐ வில்சனுக்கு போலீஸார் வீரவணக்கம் செலுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்