தி.மலையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், சமுதாய சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பு சார்பில் தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளர் அம்பிகா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் விஜயகுமாரி உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்டப் பொருளாளர் கலா வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில், “கரோனா தொற்று முன்களப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு ஊதியம் மற்றும் பயணப்படியை கால தாமதமின்றி வழங்க வேண்டும். பொது சுகாதாரத் துறையில் பணியாற்றியபோது கரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்ட ரூ.50 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவ ருக்கு அரசுப் பணியை வழங்க வேண்டும். செவிலியர்களுக்கு இரு சக்கர வாகன கடனை நிபந்தனையின்றி மானியத்துடன் வழங்க வேண்டும், ஆரம்ப சுகாதார மையத்தின் துணை மையங்களில் உள்ள காலிப் பணியிடங் களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட் டனர்.இறுதியில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வளர்மதி நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்