தாலிக்கு தங்கம் திட்டத்துக்கு காத்திருக்கும் பயனாளிகள்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் தாய், தந்தை இல்லாத பெண்ணின் திருமணத்துக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் பட்டதாரிகளுக்கு ரூ.50,000, ஒரு பவுன் தங்கமும், மற்றவர்களுக்கு ரூ.25,000, ஒரு பவுன் தங்கமும் வழங்கப்படு கிறது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பயனாளிகள் விண்ணப்பித்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் உதவித் தொகையும், தங்கமும் இன்னும் வழங்கப்படாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘உடுமலை பகுதியில் 2016-18-ம்ஆண்டு வரை 323 பயனாளி களுக்கு நிதி உதவி அளிக்கப் பட்டுள்ளது. அதன்பிறகு விண்ணப்பித்த 820 பேரின் மனுக்கள், அரசின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. உரிய உத்தரவுகள் வந்ததும், முன்னுரிமை அடிப்படையில் நலத்திட்ட உதவிகள் அளிக்கப் படும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

க்ரைம்

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்