ஊதிய உயர்வு கேட்டு ஜிப்மர் தினக்கூலி ஊழியர்கள் திடீர் போராட்டம் சுமார் 3 மணி நேரம் பணிகள் பாதிப்பு

By செய்திப்பிரிவு

புதுச்சேரி ஜிப்மரில் 500-க்கும் மேற்பட்ட தினக்கூலி ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், டெல்லி எய்ம்ஸ் ஊழியர்களுக்கு நிகரான ஊதியம் கேட்டு நீண்ட நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று திடீரென பணியை புறக்கணித்து நிர்வாக அலுவலகம் முன்பு போராட்டத்தில் இறங்கினர். கோரிமேடு போலீஸார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் ஏற்கவில்லை. ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வாலிடம் போராட்டக்குழு தரப்பில் முக்கிய நிர்வாகிகளை அழைத்துச் சென்றனர். அங்கு, ஊதியத்தை ரூ. 18 ஆயிரமாக உயர்த்த வேண்டும், கடந்த 8 ஆண்டுகளாக பிடித்தம் செய்யப்பட்ட பிஎப் பணத்தைதங்களின் கணக்கில் செலுத்தவேண்டும் எனக் கூறினர். 15 நாட்களுக்குள் இக்கோரிக் கைகளை நிறைவேற்றுவதாக ஜிப்மர் இயக்குநர் உறுதி அளிக்க, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

சினிமா

7 hours ago

கல்வி

7 hours ago

இந்தியா

7 hours ago

மேலும்