பாதுகாக்கப்பட்ட புராதனச் சின்னங்கள் பட்டியலில் திருவண்ணாமலை சிற்பக்குளம், அரியலூர் யானை சிற்பம் சேர்ப்பு

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை சிற்பக்குளம் மற்றும் அரியலூர் யானை சிற்பத்தை பாதுகாக்கப்பட்ட புராதனச் சின்னங்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக தொல்லி யல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு; தமிழகத்தில் 92 பாதுகாக் கப்பட்ட புராதனச் சின்னங்கள் தொல்லியல் துறையால் பாதுகாக் கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்ராவந்தவாடி கிராமத்தில் உள்ள சிற்பக்குளம் (அம்மாகுளம்) மற்றும் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தை அடுத்த அழகர்கோவிலில் உள்ள யானை சிற்பம் பாதுகாக்கப்பட்ட புராதனச் சின்னங்களாக சேர்க்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலையில் உள்ள சிற்பக்குளம் 16-ம் நூற்றாண்டின் நாயக்கர் மன்னர்கள் காலத்தை சார்ந்ததாக கருதப்படுகிறது. இதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள கற்களில் ராமாயணம், மகாபாரதம் மற்றும் பெரியபுராண காட்சிகள் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள் ளன. மேலும், குளத்தின் 4 நுழைவு வாயில்களில் நந்திகள் சிலை வடிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, கங்கைகொண்ட சோழபுரத்தை அடுத்த அழகர் கோவிலில் யானை சிற்பம் 80 அடி உயரத்தில் நின்றபடி உள்ளது.

இந்த சிற்பம் சுமார் 41 அடி நீளம், 12 அடி அகலம் கொண்டது. இது 16-17-ம் நூற்றாண்டைச் சார்ந்ததாக உள்ளது. சிற்பத்தில் கழுத்து, உடலின் மேற்பகுதி மணிகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளிக்கிறது.

இந்த 2 புராதனச் சின்னங்களும் தமிழக தொல்லியல் துறையால் தேர்வு செய்யப்பட்டு பின் பொதுமக்களிடம் இருந்து கருத்து கோரப்பட்டன.

அதில் எந்தவித ஆட்சேபனை களும் இல்லாததை உறுதிசெய்து இவ்விரு இடங்களும் பாது காக்கப்பட்ட சின்னங்களாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

36 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

மேலும்