சார்-பதிவாளர் அலுவலகம் திறப்பு கருப்புக் கொடி காட்டிய 8 பேர் கைது

By செய்திப்பிரிவு

கும்மிடிப்பூண்டி சார்-பதிவாளர் அலுவலக கட்டிட திறப்பு விழாவின்போது, கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பெத்திக்குப்பம் ஊராட்சி பகுதியில், ரூ.94 லட்சம் மதிப்பில் புதிதாக கும்மிடிப்பூண்டி சார்-பதிவாளர் அலுவலகம் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதை நேற்று தலைமை செயலகத்தில் இருந்து, முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அப்போது, கும்மிடிப்பூண்டி சார்-பதிவாளர் அலுவலக கட்டிடத்தில் நடைபெற்ற விழாவில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், ஒப்பந்ததாரர் டி.சி.மகேந்திரன், சார்-பதிவாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதேசமயம் சார்-பதிவாளர்அலுவலக கட்டிடத்துக்குவெளியே, ‘திறப்பு விழாவுக்கு முறையான அழைப்பு இல்லை' எனக் கூறி, தமிழக அரசை கண்டித்து, பெத்திக்குப்பம் ஊராட்சி பெண் தலைவரின் மகன், துணைத் தலைவர், வார்டுஉறுப்பினர்கள் சிலர் கருப்பு உடை அணிந்தும் கருப்புக் கொடிஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் கைதுசெய்து, பிறகு விடுவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

33 mins ago

இந்தியா

3 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

2 hours ago

உலகம்

3 hours ago

மேலும்