புதுவையில் புயல்களால் பெரும் சேதம் ரூ.100 கோடியை இடைக்கால நிவாரணமாக கேட்போம் மத்தியக் குழுவினர் சந்திப்புக்குப் பின் முதல்வர் தகவல்

By செய்திப்பிரிவு

புயல் சேதம் தொடர்பாக புதுச்சேரியில் மத்தியக் குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி ஆகியோரை சந்தித்து பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.

‘நிவர்’ புயலால் புதுவையில் 820 ஹெக்டேர் நெல், 200 ஹெக்டேர் காய்கறி தோட்டம், 170 ஹெக்டேர் கரும்பு தோட்டம், 7 ஹெக்டேர் வெற்றிலை தோட்டம், 55 ஹெக்டேர் வாழை தோட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.

மத்தியக் குழுவினர் புதுவையில் சேத மதிப்பிடுகளை பார்வையிட்டு சென்ற பின்னர் முதல்வர் நாராயணசாமி கூறுகையில், “புதுச்சேரி, காரைக்காலில் ரூ. 400 கோடி வரை பாதிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இடைக்கால நிவாரணமாக ரூ. 100 கோடி வழங்க கோரியுள்ளோம். புயல், மழையால் புதுச்சேரி அடிக்கடி பாதிக்கப்படுவதால் நிரந்தர தீர்வுத் திட்டமும், பேரிடர் நிதியும் ஒதுக்கக் கேட்டுள்ளோம்.

பேரிடர் நிதி பற்றி பிரதமர், உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுத உள்ளேன்.

டெல்லி சென்று உள்துறை அமைச்சரை சந்தித்து, இடைக்கால நிவாரணம் கோருவேன்” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

க்ரைம்

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்