காலாவதி சிலிண்டர் குறித்து குமரி ஆட்சியர் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விநியோகிக்கப்படும் எரிவாயு சிலிண்டர்களின் மேல்பகுதியில், சிலிண்டர்காலாவதியாகும் மாதம் மற்றும் வருடத்தின் விவரம் குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஏ20, பி20, சி20, டி20 என்பதில் ஏ என்பது ஜனவரி, பிப்ரவரி மார்ச் மாதத்தையும், பி என்பது ஏப்ரல், மே, ஜூன் மாதத்தையும், சி என்பது ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தையும், டி என்பது அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதத்தையும், 20 என்பது 2020ம் ஆண்டையும் குறிப்பதாகும். தற்போது, டிசம்பர் மாதத்துக்குள் விநியோகம் செய்யப்படும் சிலிண்டர்களில், சி20 என்று குறிப்பிட்டிருந்தால் அது காலாவதியானதாகும். இதுபோல், அடுத்த ஆண்டுக்கு 2021-ம் ஆண்டை குறிக்கும் வகையில் ஏ21, பி21 என்ற வரிசையில் குறியீடு விவரம் இருக்கும். காலாவதியான சிலிண்டர்களை உபயோகிப்பது ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, காலாவதியான எரிவாயுசிலிண்டர் வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டால், ரசீதில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு தெரிவிக்க வேண்டும். காலாவதியானஎரிவாயு சிலிண்டர்களை கிடங்கில்வைத்திருந்து விநியோகம் செய்வதை ஏஜென்சிகள் தவிர்க்க வேண்டும். மீறும் ஏஜென்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த்எச்சரிக்கை விடுத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

க்ரைம்

21 mins ago

விளையாட்டு

16 mins ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

மேலும்