இந்துஸ்தான் கல்லூரி சார்பில் ஐபிஎம் திட்ட ஆய்வு கருவி விநியோகம்

By செய்திப்பிரிவு

கோவை: இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில், ஐபிஎம் திட்ட ஆய்வு கருவியை ஒருங்கிணைத்து விநியோகிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

கணினி அறிவியல் துறையின் முதுநிலை மற்றும் ஆராய்ச்சித் துறை தலைவர் ஆர்.ரங்கராஜ் வரவேற்றார். இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி கே.கருணாகரன், ஐபிஎம் விரிவாக்கிய பிஎஸ்சி மாதிரியின் ஒருங்கிணைந்த பதிப்பை பற்றி விவரித்தார்.

அடிப்படை அறிவு, மெட்டா அறிவு, தனிநபர் சுய ஒழுங்குமுறை ஆகிய மூன்று களங்களை வலியுறுத்தினார். கல்லூரி முதல்வர் ஏ.பொன்னுசாமி, கோட்பாட்டு ஆய்வை விட நடைமுறை அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் புதிய கல்விக் கொள்கையை குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், வேலைவாய்ப்பு மற்றும் சமீபத்திய தொழில்நுட்பத்தின் அறிவு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.செயலாளர் பிரியா சதீஷ் பிரபு, எதிர்கால போக்குகள் மற்றும் எதிர்கால பணிக்கான தொழில்நுட்பங்களின் தாக்கம் ஆகியவற்றை விளக்கினார். ஐபிஎம்-ன் தொழில்நுட்பப் பிரிவு பிபி இயக்குநர் பிரியா பி சதீஷ், திறன் மற்றும் அறிவு வெளிப்பாட்டை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். கணினி தொழில்நுட்பத் துறையின் தலைவர் கே.மைதிலி நன்றி கூறினார்.இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில், ஐபிஎம் திட்ட ஆய்வு கருவியை வெளியிட்ட கல்லூரி நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஓடிடி களம்

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்