புதுச்சேரி காவல்துறையை முழு மதிப்பாய்வு செய்ய டிஜிபி முடிவு

By செய்திப்பிரிவு

புதுவையில் கடந்த மாதம் முதல் தொடர் கொலைகள் நடந்து வருகி ன்றன. கரோனா காலத்தைத் தொடர்ந்து சிறையிலிருந்து மிரட்டல், தொழிற் போட்டி கொலைகள், முன்விரோத கொலைகள் அதிகரித்துள்ளன. அக்கொலைகள் மிக கொடூ ரமான முறையில் நடந்து வருகின்றன.

தொடர்ந்து சிறையிலிருந்து செல்போன் பறிமுதலாகியும் அங்கி ருந்து தொடரும் வழிக்காட்டுதலும் இப்பிரச்சினைக்கு முக்கியக் காரணமாகி உள்ளது.

தற்போதைய தொடர் கொலை களால் மக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர். முதல்வர் நாராயணசாமி காவல்துறை உயர் அதிகாரிகளை அழைத்து வியாழக்கிழமை ஆலோசனை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

கிரண்பேடி ஆலோசனை

இந்நிலையில் டிஜிபி பாலாஜி வத்சவாவுடன் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நேற்று ஆலோசனை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து இக்கூட்டத் தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக கிரண்பேடி வாட்ஸ்அப்பில் வெளியிட்ட தகவல்:

டிஜிபி தனது அனைத்து காவல்துறை பிரிவுகளையும் தவறாமல் மதிப்பாய்வு செய்ய உள்ளார். முழுத்துறையையும் விரிவாக ஆய்வு செய்வார். இது வரவுள்ள தேர்தல்களுக்கு சிறப்பாக தயாராக உதவும். ஒவ்வொரு போலீஸாரும் ஸ்பெ ஷல் பிராஞ்சின் நீட்டிப்பாக கருத அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உளவுத்துறைக்கு முக்கியத் தகவல்களை பகிர போலீஸாருக்கு சிறப்பு வாட்ஸ்அப் எண் தரப்படும். சிறப்பான தகவல்களுக்கு வெகுமதி டிஜிபியால் தரப்படும். தகவல் தளத்தை மேம்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் வழக்குகள் விவரமும் ஆய்வு செய் யப்படும் என்று தெரிவித்துள் ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

10 mins ago

சுற்றுலா

22 mins ago

தமிழகம்

53 mins ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்