சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் காந்தி கிராம பல்கலை. ஆராய்ச்சியாளர்கள்

By செய்திப்பிரிவு

திண்டுக்கல் அருகேயுள்ள காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 7 ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள உலக அளவிலான சிறந்த 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் ஆராய்ச்சிகளின் தரவுகள் அடிப்படையில் பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில் சுமார் 1.6 லட்சம் விஞ்ஞானிகள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 2,314 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இந்த பட்டியலில் திண்டுக்கல் அருகே காந்தி கிராமத்தில் உள்ள காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கணிதத் துறையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம், இயற்பியல் துறையைச் சேர்ந்த ராமச்சந்திரன், மாரிமுத்து, வேதியல் துறையைச் சேர்ந்த சேதுராமன், மீனாட்சி, ஆபிரகாம் ஜான், சிவராமன் ஆகிய 7 பேர் இடம் பெற்றுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

மேலும்