பெரியகுளத்தில் முந்திரி சாகுபடி கருத்தரங்கம்

By செய்திப்பிரிவு

பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முந்திரி சாகுபடி தொழில்நுட்பக் கருத்தரங்கம் நடைபெற்றது.

மலைத்தோட்டப் பயிர்கள் துறை மற்றும் முந்திரி, கோகோ மேம்பாட்டு இயக்ககம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் த.ஆறுமுகம் தலைமை வகித்தார். துறைத் தலைவர் ஜான்சிராணி வரவேற்றார்.

தேனி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் எம்.பாண்டி முந்திரி சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கினார். அதிக மகசூலுக்கு அடர் நடவுமுறை, உயர் ரகங்கள் தேர்வு, கவாத்து உள்ளிட்ட முறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

சாகுபடி, தொழில்நுட்பம் குறித்து உதவிப் பேராசிரியர்கள் சு.முத்துராமலிங்கம், பா.இந்திராகாந்தி ஆகியோர் பேசினர். ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர். உதவிப் பேராசிரியர் இரா.சித்ரா நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

தமிழகம்

35 mins ago

சினிமா

40 mins ago

தமிழகம்

58 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

2 hours ago

கல்வி

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

13 hours ago

மேலும்