ரூ.7.12 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி; அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்

By செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் நாகூரில், அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆட்சியர் பிரவீன் பி.நாயர் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கோட்டாட்சியர் பழனிகுமார் வரவேற்றார்.

விழாவில், பல்வேறு துறைகளின் சார்பில் 541 பயனாளிகளுக்கு ரூ.7,12,53,644 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி, தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதாவது:

நாகை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களில், நடப்பாண்டு வரை 37,962 பேருக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதியுள்ள அனைவருக்கும் வரும் ஜனவரிக்குள் வழங்கப்படும். கோயில் நிலங்களில் குடியிருப்போர் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

விளையாட்டு

9 mins ago

தமிழகம்

21 mins ago

சுற்றுலா

41 mins ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்