பேச்சிப்பாறை அணை நீ்ர்மட்டம் 44 அடியாக உயர்வு

By செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44 அடியாகவும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 70 அடியாகவும் உயர்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக கனமழை பெய்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக மயிலாடியில் 43 மி.மீ., பதிவானது. கொட்டாரத்தில் 19, சிற்றாறு ஒன்றில் 12, கன்னிமாரில் 14, நாகர்கோவிலில் 9, பேச்சிப்பாறையில் 10, புத்தன் அணையில் 10, ஆரல்வாய்மொழியில் 16, குருந்தன்கோட்டில் 7 மிமீ., மழை பெய்திருந்தது.

கனமழையால் மாவட்டத்தில் உள்ள 2,040 குளங்களில் 500-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி மறுகால் பாய்கின்றன. அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 965 கனஅடி தண்ணீர் வருகிறது. நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்துள்ளது. பெருஞ்சாணிக்கு 675 கனஅடி தண்ணீர் வரும் நிலையில் நீர்மட்டம் 70 அடியை தாண்டியுள்ளது.

நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணை நீர்மட்டம் 22 அடியாக உள்ளது. தொடர் மழை மற்றும் கடல் சீற்றத்தால் குமரியில் நேற்று கட்டுமரம் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

விளையாட்டு

21 mins ago

தமிழகம்

36 mins ago

ஓடிடி களம்

57 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சுற்றுலா

24 mins ago

தொழில்நுட்பம்

15 mins ago

தமிழகம்

51 mins ago

மேலும்