நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கக்கோரி - திருப்பத்தூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் : தென்பெண்ணை-பாலாறு இணைப்பு திட்டத்தை தொடங்குக

By செய்திப்பிரிவு

திருப்பத்தூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய சங்கத்தின் திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் முல்லை தலைமை வகித்தார். இந்திய கம்யூ. கட்சியின் மாவட்டச் செய லாளர் சாமிகண்ணு, மாவட்ட துணை செயலாளர் நந்தி, நகரச் செயலாளர் சுந்தரேசன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், விவ சாயிகளுக்கான உரங்களை தட்டுப் பாடின்றி வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உடனடியாக வழங்க வேண்டும். கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும்.

மழை வெள்ளத்தால் மண் சரிந் ததால் பாதிக்கப்பட்ட கிணறுகள், மின் மோட்டார்களை புனரமைக்க கிணற்று பாசன விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். திருப்பத்தூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக தொடங்க வேண்டும்.

கெலவரப்பள்ளி அணையில் இருந்து செட்டேரி அணைக்கு இணைப்பு கால்வாய் அமைக்க வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தில் மழை பெய்தும் ஜோலார்பேட்டை, கந்திலி, நாட்றாம்பள்ளி ஒன்றியங்களில் மேற்கு புறத்தில் உள்ள பல ஏரிகளுக்கு தண்ணீர் வராத நிலை உள்ளது. எனவே, தென்பெண்ணை-பாலாறு இணைப்பு (கல்லாறு) திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும்’’ என்ற கோரிக்கைகள் முன் வைத்து முழக்கமிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

20 mins ago

தமிழகம்

14 mins ago

க்ரைம்

15 mins ago

உலகம்

43 mins ago

தமிழகம்

45 mins ago

சினிமா

56 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்